லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி-67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார்.
2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி-67 படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் – த்ரிஷா ஜோடி சேர இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீயும் நானும் ஜோடி தான் என்று குருவி படத்தில் மொழமொழன்னு இவர்கள் ஆடிய ஆட்டத்தை அடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார் த்ரிஷா.
இந்த படத்தில் சமந்தா நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.