பெங்களூரு : பெங்களூரில் மழைக்கால நோய்களுடன், பன்றி காய்ச்சலும் பரவி வருகிறது. இதை தடுப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.பெங்களூரில் தொடர் மழையால் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்றவற்றோடு சாதாரண காய்ச்சலும் அதிகரித்துள்ளது. இந்த நோய் தாக்கத்தால் தனியார், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது.
இத்துடன் ‘எச்1 என்1’ எனப்படும் பன்றி காய்ச்சலும் பரவுகிறது. அப்பல்லோ மருத்துவமனைக்கு வரும் 50 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.*நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகள்அறிகுறிகள்: அதிகமான கை, கால், வலி; இருமலுடன் மஞ்சள் நிற சளி; சளி மற்றும் தொண்டை கரகரப்பு; அதிகமான காய்ச்சல், வாந்தி – பேதி; மூச்சு விட சிரமம் போன்றவை பன்றி காய்ச்சலின் அறிகுறிகளாகும்.தடுக்கும் வழிமுறைகள்: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது; ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிடுவது; மக்கள் கூடும் இடத்துக்கு முக கவசத்துடன் செல்வது; இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டையால் பொத்தி கொள்வது; கைகளை நன்றாக கழுவது; நன்றாக துாங்கி நெருக்கடியை குறைத்து கொள்வது.என்னென்ன செய்ய கூடாது: டாக்டர் ஆலோசனை இன்றி மருந்துகள் சாப்பிட கூடாது; சாலையில் கண்ட இடத்தில் துப்பக்கூடாது; தேவையில்லாமல் மக்கள் நெருக்கடி உள்ள இடத்துக்கு செல்வதை தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement