வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது என ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் தொடர்பான உண்மையான மற்றும் ஆதார அடிப்படையிலான பட்டியலின் முன்மொழிவுகள் கிடப்பில் போடப்படுவது மிகவும் வருந்தத்தக்கது.
பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இது உலகம் முழுவதிலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த குரல் கொடுத்தால் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement