மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமைவாக அன்றி, சில தனியார் பஸ்களில் ஆகக்கூடுதலான தொகை கட்டணமாக அறவிடப்படுவதாக பயணிகள் முறைப்பாடு செய்திருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பஸ்களில் மறுசீரமைக்கப்பட்ட பஸ் கட்டணங்களை காட்சிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.