வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா? அப்படி எனில் இது சரியான தருணம் தான். ஏனெனில் ஆர்பிஐ-யின் ரெப்போ விகித அதிகரிப்புக்கு பிறகு பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
பல வங்கிகளும் வட்டி விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது கோடக் மகேந்திரா வங்கி, இந்தஸ்இந்த் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதனால் இனி வாடிக்கையாளர்கள் எவ்வளவு வட்டியினை பெறுவார்கள்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
உலகிலேயே பணக்கார குடும்பங்கள் இவங்க தான்.. ஒரே ஒரு இந்திய குடும்பம்.. யார் அது!
கோடக் மகேந்திர வங்கி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான கோடக் மகேந்திர வங்கியானது, 2 கோடி ரூபாய்க்குள்ளான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஆகஸ்ட் 10, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் டெபாசிட்களுக்கான காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் உள்ளது. வட்டி விகிதம் 2.50% முதல் 5.90% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3% முதல் 6.40% வரையிலும் வழங்கப்படுகின்றது.
கோடக் மகேந்திர வங்கி (பொதுமக்கள்)
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 2.50%
15 நாள் முதல் 30 நாட்கள் வரையில் – 2.65%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.25%
46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.25%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் – 3.75%
121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் – 3.75%
180 நாட்கள் – 5%
181 நாள் முதல் 269 நாட்கள் வரையில் – 5%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் – 5%
271 நாள் முதல் 363 நாட்கள் வரையில் – 5%
364 நாட்கள் – 5.25%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையில் – 5.75%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்)
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 5.85%
23 மாதங்கள் – 5.85%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 5.85%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 5.85%
3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் – 5.90%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.90%
கோடக் மகேந்திர வங்கி (மூத்த குடிமக்கள்)
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் – 3%
15 நாள் முதல் 30 நாட்கள் வரையில் – 3.15%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.75%
46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் – 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் – 4.25%
121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் – 4.25%
180 நாட்கள் – 5.502%
181 நாள் முதல் 269 நாட்கள் வரையில் – 5.50%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் – 5.50%
271 நாள் முதல் 363 நாட்கள் வரையில் – 5.50%
364 நாட்கள் – 5.75%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையில் – 6.25%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) -6.35%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் – 6.35%
23 மாதங்கள் – 6.35%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் – 6.35%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் – 6.35%
3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் – 6.40%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 6.40%
இந்தஸ்இந்த் வங்கி
இந்தஸ்இந்த் வங்கியிலும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆகஸ்ட் 10 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கியில் அதிகபட்சம் 5.50% ஆக வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் படி தினசரி 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் – வட்டி விகிதம் 3.50%
ரூ.1 லட்சத்திற்கு மேல் – ரூ.10 லட்சத்திற்குள் தினசரி இருப்பு இருந்தால் – 3.50%
ரூ.10 லட்சத்திற்கு மேல் – ரூ.1கோடிக்குள் – 4.50%
ரூ.1 கோடிக்கு மேல் – ரூ.100 கோடி வரையில் – 5.50%
Kotak Mahindra Bank, indusind bank interest rate hike: Here are the full details
Kotak Mahendra Bank, indusind bank interest rate hike: Here are the full details/பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !