வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி : ‘திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மூத்த குடிமக்கள், கைகுழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் திருமலை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்’ என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுஉள்ளது.
திருவிழா
நாளை முதல் 15 வரை தொடர் விடுமுறை காரணமாக, திருமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவர் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருதுகிறது. எனவே, தரிசனம் மற்றும் தங்குமிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து திருமலைக்கு வருமாறு பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளது.திருமலையில், கோடைகால கூட்ட நெரிசல் குறைந்தாலும், வார இறுதி கூட்டமும், திருவிழா கூட்டமும் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் கூட்டத்திற்கு குறைவிருக்காது.
பொறுமை
மேலும் புனித மாதமான புரட்டாசி, செப்டம்பர் 18ல் துவங்கி, அக்டோபர் 17ல் தான் முடிவடைகிறது. இந்த மாதத்திலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.’எனவே, மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தற்போதைக்கு திருமலைக்கு வர வேண்டாம்’ என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும், தரிசன வரிசைகளிலும் பொறுமையுடன் காத்திருக்குமாறு தேவஸ்தானம் கேட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement