மென்மையான தலைமுடிக்கு ரசாயனமில்லாத கெரட்டின் சிகிச்சை.. வெண்டைக்காய் போதும்

கெரட்டின் என்பது முடியின் இயற்கையான புரதமாகும், இது கோர்டெக்ஸ் மற்றும் க்யூட்டிகில் உள்ளது. வயது, சுற்றுச்சூழல், ஸ்டைலிங், மோசமான உணவு, புகைபிடித்தல் போன்றவற்றால் இது குறைகிறது. மேலும் முடி உதிர்தல் மற்றும் கட்டுப்படுத்த முடியாத முடிக்கு வழிவகுக்கிறது.

ஆனால் உங்கள் மிருதுவான முடிக்கான தீர்வு, வெண்டைக்காயில் உள்ளது. வெண்டைக்காய் இயற்கையான கண்டிஷனர் என்று கூறப்படுகிறது. பட்டுப்போன்ற, நேரான கூந்தலைப் பெற வீட்டில் இரசாயனமில்லாத கெரட்டின் சிகிச்சை எப்படி செய்யலாம் என்பது இங்கே.

“இது பளபளப்பான மற்றும் மிருதுவான கூந்தலுக்கான ஒரு சுவாரஸ்யமான செய்முறையாகும், ஆனால் ஓரிரு கழுவல்களுக்கு மட்டுமே இது நீடிக்கும். தற்காலிகமாக ஃப்ரிஸில் இருந்து விடுபட உதவும்.

வெண்டைக்காயில் பைட்டோகெராடின் (தாவர அடிப்படையிலான கெரட்டின்), நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், அதை வாய்வழியாக உட்கொள்வது முடியை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்:

தேவையான பொருட்கள்

8 – வெண்டைக்காய்

தண்ணீர்

1 டீஸ்பூன் – சோள மாவு

1 டீஸ்பூன் – தேங்காய் எண்ணெய்

1 டீஸ்பூன் – பாதாம் எண்ணெய்

எப்படி செய்வது

வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதை முழுவதுமாக ஆற விடவும்.

இதை அப்படியே தண்ணீருடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாகும் வரை அடிக்கவும், பின்னர் ஒரு மஸ்லின் துணியின் உதவியுடன் வடிகட்டவும்.

மற்றொரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி சோள மாவுடன் சிறிது தண்ணீர் கலக்கவும். இதை வெண்டைக்காய் கலவையில் சேர்க்கவும்.

இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, குறைந்த தீயில் கொதிக்க விடவும். தொடர்ந்து கிளறவும். க்ரீம் மிக்ஸர் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆற விடவும்.

இதில் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்க்கவும்.

எப்படி அப்ளை செய்வது?

உங்கள் தலைமுடியை ஒவ்வொரு பகுதிகளாகப் பிரித்து, கலவையை முழுவதுமாக தடவுங்கள். உங்கள் தலைமுடியை ஷவர் கேப் மூலம் மூடி வைக்கவும். இரண்டு மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

ஷாம்பூவைப் பயன்படுத்தாமல் உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவவும்.

வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தினால், முடி நேராகவும், பட்டுப் போலவும் இருக்கும்.

வெண்டைக்காய் முடியை வலுப்படுத்தவும் நீட்டிக்கவும் உதவுகிறது. இது முடி உதிர்வை நிறுத்துவதோடு, வழுக்கைத் திட்டுகளுக்கு மேல் தடவினால் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.