மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ரெசிஷன் அச்சம் காரணமாக ஏற்கனவே 1800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் பணிநீக்கத்தை அறிவித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மைக்ரோசாப்ட் இந்தப் பணிநீக்கத்தின் போது ஊழியர்களுக்குச் சொன்ன அறிவிப்புகள் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளது.

Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?

அமெரிக்கா

அமெரிக்கா

உலகளவில் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளதால் அமெரிக்காவில் பல முன்னணி டெக் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க முன்கூட்டியே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளனர்.

நிறுவனங்கள் முடிவு

நிறுவனங்கள் முடிவு

இதன் எதிரொலியாக அதிக ஊழியர்களை வைத்துள்ளவர்கள், போதிய வர்த்தகம் கிடைக்காது எனக் கணித்துள்ள நிறுவனங்கள், ஊழியர்களின் திறனை மேம்படுத்தத் திட்டமிட்டும் நிறுவனங்கள் எனப் பல தரப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது.

அச்சம்

அச்சம்

இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை இழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டு மக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளது.

மைக்ரோசாப்ட்
 

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே மறுசீரமைப்பு, செலவுகள் குறைப்புக் காரணம் கூறி 1800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இன்று கூடுதலாக 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

200 ஊழியர்கள்

200 ஊழியர்கள்

இதுகுறித்து அறிவிப்பை பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களிடம் கூறிய மைக்ரோசாப்ட் பெரும்பாலான ஊழியர்களுக்கு severance pay கொடுத்து வெளியேறிய நிலையில், சிலருக்கு மட்டும் நிறுவனத்தில் வேறு பணியில், பதவிகளில் பணியாற்ற அனுமதி அளித்துள்ளது.

70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Microsoft layoff 200 more employees after firing 1800 people last month

Microsoft layoff 200 more employees after firing 1800 people last month மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

Story first published: Wednesday, August 10, 2022, 21:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.