12 ஆண்டுகள் குஜராத் மாநில முதல்வர், 2 வது முறையாக இந்தியாவின் பிரதமர் எனப் பதவி வகித்துவரும் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவலை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், பிரதமரிடம் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும், அசையும் சொத்துகள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அசையும் சொத்துகளும், பெரும்பகுதி வங்கி சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு, காப்பீடுகள் மட்டுமே எனவும் விளக்கமளித்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/62f31c361b229.webp.jpeg)
சொந்த கார் கூட வைத்திருக்காத பிரதமர், 1.73 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்கள் 4 வைத்திருக்கிறார் என்றும், காந்தி நகரில் தனக்கு வழங்கப்பட்டிருந்த சொத்தின் பங்கு நிலத்தையும் தானமாகப் பிரதமர் வழங்கிவிட்டதாகவும், தற்போது கையிருப்பில் ரொக்கமாக ரூ.35,250 மட்டுமே வைத்திருக்கிறார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமரின் தற்போதைய மொத்த சொத்துகள் மதிப்பு ரூ. 2.23 கோடியாகும். கடந்த ஆண்டு வெளியிட்ட சொத்து மதிப்பை விட இந்த ஆண்டு ரூ.26 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.