"யாராவது உங்களை 'மலர்' ஆக கருதினால், நெருப்பாக மாறுங்கள்"- இஷான் கிஷன் மறைமுக பதிலடி

மும்பை,

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியான நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அதிக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் சில முக்கிய வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீப காலமாக 20 ஓவர் போட்டிகளில் அசத்தி வரும் இளம் இந்திய வீரர் இஷான் கிஷன் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இதற்கு இஷான் கிஷான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், இந்தி பாடல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் ” ஒரு விஷயம் வலியை கொடுக்கிறது என்பதற்காக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாதீர்கள். யாராவது உங்களை ‘மலர்’ ஆக கருதினால், நீங்கள் நெருப்பு என்பதை உணர்த்துங்கள்” என குறிப்பிடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.