ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் விமான தளத்தில் தொடர் குண்டுவெடிப்பு! தாக்கியது யார்? பரபரப்பு வீடியோ



* கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கடலோர ரிசார்ட்டுகளுக்கு அருகில் உள்ள ரஷ்ய விமானத் தளத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

* உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் ரஷ்யா மறுப்பு

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

முன்னாள், சோவியத் யூனியனில் இருந்த உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கடலோர ரிசார்ட்டுகளுக்கு அருகில் உள்ள ரஷ்ய விமானத் தளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
குண்டு வெடிப்பு சம்பங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் காணப்படுகிறது.

உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் இது சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததால் ஏற்பட்ட சம்பவம் எனவும் தாக்குதலின் விளைவு அல்ல எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் விமான உபகரணங்கள் எதுவும் சேதமடையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.