ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து இன்று மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்!

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியுள்ள நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கிறார். இதனையடுத்து மொத்த அமைச்சரவையும் மாற்றப்பட வேண்டும் சூழல் உருவாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் எதிரபார்த்த அரசியல் மாற்றமான பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி முறிந்துள்ளது. தனது முதல்வர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்ததோடு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளை கொண்ட மகாகட்பந்தன் கூட்டணியிலும் ஐக்கியமாகியுள்ளார்.
image
இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் 8வது முறையாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். இதனை தொடர்ந்து துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்க உள்ளார். அதே சமயம் ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
image
கடந்த ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 31 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிகார் மாநில அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தனர். ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ் குமார் மாநிலத்தின் முதலமைச்சர், உள்துறை, பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மாநில தேர்தல் உள்ளிட்ட துறைகளை தன் வசம் வைத்திருந்தார். இவற்றில் முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பின் சில மணி நேரத்திலேயே, மீண்டும் ஆட்சியமைக்கவும் ஆளுநரிடம் உரிமை கோரினார். 
image
மற்றபடி முக்கிய இலாக்கள் பலவும் பாஜக வசமே இருந்தது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத்துக்கு, நிதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு துறை ஆகியவை வழங்கப்பட்டிருந்தது. இவை தவிர மாநில அரசின் முக்கிய அமைச்சரவை பொறுப்புகளான, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை,தொழில் துறை, சுகாதாரத்துறை, மாநில சாலை கட்டுமானத்துறை, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை, கரும்புத் தொழில் துறை, சுற்றுலாத்துறை, சுரங்க மற்றும் புவியியல் துறை, வருவாய் மற்றும் நில சீர்திருத்தத்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
image
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சமூக நலத்துறை, கட்டிட கட்டுமானத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக பணிகள் துறை, மாநில நீர் வளர்ச்சித்துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை, எரிசக்தி துறை, மாநில வளர்ச்சி திட்டமிடல் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை, கலால் துறை மற்றும் பதிவுத்துறை உள்ளிட்ட இலக்கங்கள் ஜனதா தளத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவை தவிர சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு சில இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.
image
இப்போது ஆட்சியும், காட்சியும் மாறியுள்ளதால் அமைச்சரவையும் மாற்றத்திற்கு உட்பட வேண்டியுள்ளது. “பாரதிய ஜனதா கட்சி – ஜனதா தள” கூட்டணியில் ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சியே அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு இருந்த நிலையில் அமைச்சரவையில் அதிக இடங்கள் கேட்டு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முதல் தொடங்கவுள்ள புதிய கூட்டணியிலும் ஜனதா தளத்தை விட ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கே அதிக அளவிலான சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சியை போல் ராஷ்டிர ஜனதா தளத்திற்கும் அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
image
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை தவிர ராஷ்டி ஜனத்தளத்தின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவும் நிதீஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் அக்கட்சியினரும் அமைச்சரவையில் இடம் கேட்டு அழுத்தம் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.