பெங்களூரு, : போக்குவரத்து நெரிசல் குறைக்கும்படி, பெங்களூரு வெளிவட்ட சாலைகளின் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம், சாலை விரிவாக்கம், மேம்பாலம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வேண்டுமெனில், நெரிசலில் சிக்கி தாமதமாக தான் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் முன் கூட்டியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை கூடுதல் தலைமை செயலர் ரஜனீஷ் கோயல், பெங்களூரு போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.முதல் கட்டமாக வெளிவட்ட சாலைகளின், சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கும் வகையில், தடை அறிவிப்பு பலகைகள் பொருத்துவதற்கு போலீசார் தயாராகிஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement