சிக்கமகளூரு : கரை புரண்டோடிய வெள்ளத்தில் காரை ஓட்டி செல்ல முயன்ற போது, கார் ஓடையில் கவிழ்ந்தது. இதில் சிக்கி கொண்ட, இரண்டு பேர், கார் கண்ணாடியை உடைத்து உயிருடன் மீட்கப்பட்டனர்.சிக்கமகளூரின் சுற்றுலா தலமான முல்லையன்கிரி மலை பகுதியில் பலத்த மழை பெய்கிறது. இதனால் சக்கராயபட்டணா சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இச்சாலையில் உள்ள பிள்ளனஹள்ளி கிராமத்திலும் ஓடை மீதுள்ள தரைப்பாலத்தின் மீது வெள்ளம், ஐந்து அடிக்கு மேல் செல்கிறது.
இதனால் கிராமத்தினர் யாரும் இந்த பாலத்தை போக்குவரத்துக்காக பயன்படுத்துவதில்லை.இந்நிலையில் நேற்று சக்கராயப்பட்டணாவில் மொபைல் கடை வைத்திருக்கும் கிரிஷ், 35 என்பவர் தன் நண்பருடன் காரில் அந்த வழியாக வந்தார். கிராமத்தினரின் எச்சரிக்கையை மீறி இருவரும் காரில் வெள்ளத்தை கடந்து செல்ல முயன்றனர்.அப்போது கார் ஓடையில் கவிழ்ந்தது. இதை பார்த்த கிராமத்தினர் உடனடியாக ஜெ.சி.பி., வரவழைத்து காரை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதிலிருந்த இருவரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனால் காரின் முன் கண்ணாடியை உடைத்து கிராமத்தினர் இருவரையும் வெளியே எடுத்தனர். நீண்ட போராட்டத்துக்கு பின் காரும் வெளியே எடுக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement