70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!

சீனா கடந்த 50 வருடத்தில் யாரும் கனவில் கூட எதிர்பார்க்க முடியாத வளர்ச்சியைக் கண்டு உள்ளது, சீனா-வின் வளர்ச்சி எந்த அளவிற்கு பிரமிக்க வைக்கிறதோ, அதே அளவிற்குப் பயமுறுத்தவும் செய்கிறது என்றால் மிகையில்லை.

சீனா ஒருபக்கம் தைவான் நாட்டை போரிட்டு கைப்பற்ற வேண்டும் என திட்டமிடும் நிலையில் உலக நாடுகளைத் தனது கடன் வளையில் சிக்க வைத்துக் கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாய் உள்ளது.

இதுவரை 4 முக்கிய ஆசிய நாடுகள் சீன கடன் வலையில் சிக்கியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், நேபாள், புதிதாக இணைந்த பங்களாதேஷ் ஆகியவை சீன கடன் சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?

4 நாடுகள்

4 நாடுகள்

இலங்கை, பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்திலும், நிதி நிலையிலும் தடுமாறி இருக்கும் போது பெரும் முதலீட்டுத் திட்டத்தை ஆசை காட்டி சீனா அவர்களைக் கடன் சுமை ஏற்றிவிடுவது தான் இந்த 4 நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய ஒற்றுமையாகப் பார்க்கப்படுகிறது.

பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்

பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ்

சீன அரசின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேடிவ் என்னும் உலகளாவிய உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் வாயிலாகச் சீன உலகளவில் சுமார் 70 நாடுகளில் பெரிதும் சிறிதுமாக முதலீடு செய்துள்ளது.

கட்டுமான திட்டங்கள்
 

கட்டுமான திட்டங்கள்

இந்த முதலீட்டு திட்டத்தின் வாயிலாகச் சீன அரசின் நேரடி முதலீட்டில் சீன அரசு நிறுவனங்கள் உலக நாடுகளில் துறைமுகங்கள், சாலைகள், பாலங்கள், அணைகள், மின் நிலையங்கள், இரயில் பாதைகள் எனப் பல கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

சீனாவின் டார்கெட்

சீனாவின் டார்கெட்

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) படி, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) மேம்பாட்டு உத்தியானது சீனாவை உள்ளடக்கிய ஆறு முக்கியப் பொருளாதாரப் பிராந்தியங்கள் உடன் இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6 பொருளாதாரப் பிராந்தியங்கள்

6 பொருளாதாரப் பிராந்தியங்கள்

அப்படிச் சீனா உறவு கொண்டாட நினைக்கும் 6 முக்கியப் பொருளாதாரப் பிராந்தியங்கள் இதுதான் மங்கோலியா மற்றும் ரஷ்யா; யூரேசிய நாடுகள்; மத்திய மற்றும் மேற்கு ஆசியா; பாகிஸ்தான்; இந்திய துணைக் கண்டத்தின் மற்ற நாடுகள்; மற்றும் இந்தோசீனா.

கடன் வலை யாருக்கு

கடன் வலை யாருக்கு

சீனாவின் கடன் வலையில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மிகப்பெரிய அளவில் மாட்டிக்கொண்டு வருவதாகப் பல ஆண்டுகளாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக இந்த 4 நாட்கள் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

ஆசை காட்டிய சீனா

ஆசை காட்டிய சீனா

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நடுத்தரப் பொருளாதார நாடுகளால் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்க்க முடியாத வகையில் இருந்த காரணத்தால் கவர்ந்திழுத்துள்ளது சீனா. இதுதான் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் அடித்தளம்.

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

இலங்கை, பாகிஸ்தான், நேபாள் ஆகியவை ஏற்கனவே பெரிய நெருக்கடியில் மாட்டிக்கொண்டு மீண்டு வர முயற்சி செய்து வரும் நிலையில் பங்களாதேஷ் கடன் சுமையால் தவித்து வரும் நிலையில் அன்னிய செலாவணி இருப்பு குறைந்துள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் கடந்த வாரம் ஐஎம்எப் அமைப்பிடம் நிதியுதவியைக் கேட்டது.

4 பில்லியன் டாலர் கடன்

4 பில்லியன் டாலர் கடன்

பங்களாதேஷ் நாட்டிற்குச் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் வாயிலாகச் சுமார் 4 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளது. இது அந்நாட்டின் மொத்த அன்னிய செலாவணி இருப்பில் 6 சதவீதம், இதேபோல் ஐஎம்எப் அமைப்பிடம் கேட்ட தொகையும் 4 பில்லியன் டாலர் தான்.

அடுத்தது Laos

அடுத்தது Laos

இந்த வரிசையில் தற்போது சீன கடன் வலையில் சிக்கி பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கப்போவது தென்கிழக்கு ஆசிய நாடான Laos. இந்த நாடு அதிகப்படியான கடன் சுமையால் எப்போது வேண்டுமானாலும் திவாலாகலாம் என்ற நிலையில் தான் உள்ளது.

சீனா கடன் சுமை

சீனா கடன் சுமை

Laos நாட்டின் மொத்த கடன் அளவு அந்நாட்டின் மொத்த ஜிடிபி அளவில் 88 சதவீதத்தை 2021ல் அடைந்துள்ளது என உலக வங்கி தரவுகள் கூறுகிறது. தற்போது அந்நாட்டின் மொத்த கடன் அளவு 14.5 பில்லியன் டாலர் இதில் பாதிச் சீனா நாட்டைத் தொடர்புடையது.

லாவோஸ்-சீனா ரயில்வே திட்டம்

லாவோஸ்-சீனா ரயில்வே திட்டம்

418 கிமீ லாவோஸ்-சீனா ரயில்வே திட்டம் பெய்ஜிங் இரயில்வே குழுமம் உடன் இணைந்து அந்நாட்டு அரசு அமைத்தது. இத்திட்டத்தில் சுமார் 70 சதவீத பங்குகளைச் சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்களுக்கும், 30 சதவீத பங்குகளை லாவோஸ் நாட்டு நிறுவனமும் வைத்துள்ளது.

சீனா, தைவானில் முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்கள் கண்ணீர்.. ஏகப்பட்ட நஷ்டம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: china debt சீனா கடன்

English summary

China’s BRI strategy invested in nearly 70 countries; Debt-Trap Pushing Vulnerable Countries to Economic Crisis

China’s BRI strategy invested in nearly 70 countries; Debt-Trap Pushing Vulnerable Countries to Economic Crisis | 70 நாடுகளில் முதலீடு செய்த சீனா.. அடுத்தது யாரெல்லாம் திவாலாக போகிறார்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.