Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
செஸ் ஒலிம்பியாட்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியா்கள் பதக்கம் வென்றனா். ஓபன் பிரிவில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு தங்கப் பதக்கம், இந்திய பி அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. மகளிர் பிரிவில், உக்ரைன் அணிக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் தங்கம் வென்றனர். எரிகேசி அர்ஜுன் வெள்ளி பதக்கமும், பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி ஆகஸ்டு 25ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பீகார் மாநில முதல்வர் ராஜினாமா
பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகு சௌகானிடம் அளித்தார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதீஷ்குமார், “ பாஜகவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக்கொண்டது. இந்த முடிவை எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர்” என கூறினார்.
லாலு பிரசாத் கட்சியின் ஆதரவோடு, முதல்வராக நிதீஷ்குமார் இன்று மீண்டும் பதவியேற்கிறார். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தேஜஸ்வி யாதவ் புதிய துணை முதல்வராகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கர்நாடகா கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 96,344 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 41,438 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால், காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,32,360 கன அடியில் இருந்து 1,37,782 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி தொடங்கி வைக்கிறார்.