பங்கு சந்தையில் நீண்டகால முதலீடு என்பது மிக லாபகரமான ஒன்று என்பதற்கான பதிவு இது. பொதுவாக இதுபோன்ற மல்டிபேக்கர் பங்குகள் அமைவது கடினம். எனினும் அது கிடைத்தால் பொக்கிஷமாக ஹோல்டு செய்து வைப்பது நல்லது.
அப்படி நீண்டகால நோக்கில் லாபம் கொடுத்த பங்குகளில் ஈச்சர் மோட்டார்ஸ்-ம் ஒன்று.
ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த இந்த பங்கின் நிலவரம் என்ன? 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
ரூ.7 டூ 1005: ரூ.1 லட்சம் 1 கோடியான பங்கு.. என்ன நிறுவனம் அது.. உங்க கிட்ட இருக்கா?
420 மடங்கு லாபம்
ஒரு காலகட்டத்தில் பென்னி பங்காக இருந்த இந்த பங்கின் விலை 7.50 ரூபாயாக இருந்தது. இன்று அதன் மதிப்பு 3145 ரூபாயாக உள்ளது. அதன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சுமார் 420 மடங்கு லாபம் கொடுத்துள்ளது. இந்திய பங்கு சந்தைகளில் லாபம் கொடுத்துள்ள மல்டிபேக்கர் பங்காக உள்ளது.
நல்ல ஏற்றம்
கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்த பங்கின் விலையானது நல்ல ஏற்றம் கண்டு வரும் பங்கினில் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றம் கண்டுள்ளது. 15% மேலாக லாபம் கொடுத்துள்ளது. 2021ல் நல்ல லாபம் கொடுத்த பங்குகளில் இதுவும் ஒன்று எனலாம்.
6 மாத நிலவரம்?
2021ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1270 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாதத்தில் 2600 ரூபாய் என்ற லெவலில் இருந்து 3145 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் இப்பங்கானது 21% ஏற்றம் கண்டுள்ளது.
41900% லாபம்
இது 7.50 ரூபாயில் இருந்து, 3145 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் 41900% லாபத்தினை பங்குதாரர்களுக்கு கொடுத்துள்ளது.
இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் ஆறு மாதத்தில் 1.21 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே 10 வருடங்களுக்கு முன்பு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 15.25 லட்சம் ரூபாயாகும். இதே 20 வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தால், இன்று அதன் மதிப்பு 4.20 கோடி ரூபாயாகும்.
Rs.7.5 to Rs.3145: This automobile stock turns to Rs.4.20 crore in 20 year
Rs.7.5 to Rs.3145: This automobile stock turns to Rs.4.20 crore in 20 year/அதல பாதாளத்தில் இருந்து உச்சம்.. ரூ.7.5 டூ ரூ.3145க்கான லாபம் பயணம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?