காஷ்மீரில் ரஜோரி பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருந்த ராணுவ முகாமில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் உட்பட 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு நாடு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே உஷார் நிலையில் உள்ளனர்.
இறந்த 3 மூன்று இந்திய வீரர்களில் ஒருவரான மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார். 24 வயதேயான லட்சுமணன் 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கியுள்ளார். தர்மராஜ் – ஆண்டாள் ஆகியோரின் மகனான லட்சுமணன் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து ராணுவத்தில் சேவையாற்றும்போது வீரமரணம் அடைந்துள்ளார்.
இவரது மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கலை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், அப்பதிவில், “ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் திரு.லட்சுமணன் அவர்கள் வீர மரணம் அடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். மதுரை, புதுப்பட்டியைச் சேர்ந்த வீரர் திரு.லட்சுமணன் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை, புதுப்பட்டியைச் சேர்ந்த வீரர் திரு.லட்சுமணன் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 11, 2022
ராணுவ வீரர் லெட்சுமணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. நாளை காலை ராணுவ விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதை செலுத்தியபின்னர் சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ராணுவ வீரரின் சொந்த ஊரான புதுப்பட்டியில் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் குவிந்துவருகின்றனர்.
மேலும் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனிடையே ராணுவ வீரர் லெட்சுமணின் வீர மரணத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார். “இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் பலியாகியுள்ளார். அவருக்கு வீர வணக்கம். குடும்பத்தாருக்கும் – நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள் …” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் பலியாகியுள்ளார்.

அவருக்கு வீர வணக்கம்.

குடும்பத்தாருக்கும் – நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள் …#Army #Madurai pic.twitter.com/uK593eE8p9
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 11, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM