புதுச்சேரி: ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, அரசு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் 64 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 5:௦௦ மணியளவில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், தங்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆனந்த் என்கிற ஊழியர், பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள், அவரை தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement