வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
குமார் மற்றும் பாபு இருவரும் நண்பர்கள், ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள். இருவருக்குமே பணம் சேமிப்பதுதான் இலக்கு, ஆனால் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறு. குமார் சிக்கனத்தை நம்பினார், பாபுவோ கஞ்சத்தனம் தான் பணத்தை சேமிக்க ஒரே வழி என்று எண்ணினார்.
அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவம்,
தீபாவளி நெருங்கிவிட்டது புது ஆடைகள் எடுக்கணும். இந்த வாரம் வாங்கிவிட வேண்டும் , இல்லை என்றால் பின், நேரம் இருக்காது என்று இருவரும் வெள்ளிக்கிழமை மாலை அலுவகம் முடித்து செல்லும் போது பேசிக்கொண்டனர்.
சனிக்கிழமை காலை தனது மனைவி, குழந்தைகளை அழைத்துத் கொண்டு ஷாப்பிங் செல்கிறார் பாபு.
இன்று ஷாப்பிங் பட்ஜெட் என 3000 ரூபாய் எடுத்து வைத்திருந்தார், மனைவிக்கு ஒரு புடவை மிகவும் பிடித்து இருந்தது. அதன் விலை குறைவு தான் பாபுவின் பட்ஜெட்டில் அதை எளிதாக வாங்கி இருக்க முடியும், ஆனால் பாபு அதை வாங்கித்தர மறுத்துவிட்டார். இன்னும் குறைவான விலையில் ஏதேனும் புடவை இருந்தா எடுத்துக்கொள் என்றார். இங்கு அவ்வளவு நான்றாக இல்லை நாம் வேறு கடைக்கு செல்வோம் என்கிறாள் மனைவி, சும்மா சும்மா கடைக்கு மாறி மாறி போக முடியாது இங்கயே எடு என்று கடிந்துக் கொண்டார். மகனுக்கும் மகளுக்கும் கூட அதே நிலைதான். பணம் செலவு செய்ய அவரது மனம் விரும்பவில்லை.
இது போக பில்லிங் கவுண்டரிலும் வாக்குவாதம் செய்தார். இவ்வளவு விலை இருந்தா எப்படி எடுப்பது இன்னும் விலை குறைக்க வேண்டும் என்று bargain செய்கிறார். அவரது செயல் அவரின் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. வீடு திரும்பியதும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை. ஆனால் பாபு, அப்பாடா 3000 ரூபாய்க்கு கணக்கு போட்டோம் 1500 லே முடிஞ்சது என்று கர்வம் கொண்டார்.
மறுபுறம் குமார் அவர் குடும்பத்தினர் உடன் துணிக்கடைக்கு செல்கிறார் அவரும் 3000 ரூபாய் பட்ஜெட் வைத்து உள்ளார். இங்கே அவரது மகள் ஆசையாக ஒரு உடை கேட்கிறாள். குமார் அதன் விலையை பார்க்கிறார், ஆனால் விலை அதிகம் என்று தோன்றுகிறது. குமாருக்கு Bargain செய்வது கொஞ்சம் கடினம், இருந்தாலும், ஊழியர் இடம் இது விலை கொஞ்சம் அதிகமா இருக்கே, இதே மேட்டீரியல் வேற brand’ல் கிடைக்குமா? இல்லங்க இது ஒன்னு தான் இருக்கு என்கிறார் ஊழியர்.
சரி வேறு கடையில் பாக்கலாம் என்று தன் மகளுக்கு ஆறுதல் கூறி வேறு சில கடைகளில் தேடுகிறார். அதே உடை அவர் நினைத்த விலையில் வேறு கடையில் கிடைக்கிறது. மகிழ்ச்சியாக அனைவரும் வீடு திரும்புகிறார்கள். குமார் திட்டமிட்ட பட்ஜெட் 3000 ஆனால் 2500 ரூபாயில் தரமான பொருட்கள் வாங்கியதில் அவருக்கு மகிழ்ச்சி.
தீபாவளி முடிகிறது. பாபு வாங்கிய ஆடைகள் ஓர் இரு சலவைக்கே தாங்க வில்லை, மீண்டும் குடும்பத்தில் வருத்தம் தான் நிலவுகிறது. தன் செயலை எண்ணி அவர் வருத்தம் கொள்கிறார். அவர் சேமித்த பணத்தை மீண்டும் செலவுக்கு எடுக்கிறார். சேமிப்பும் கரைந்தது மகிழ்ச்சியும் கரைந்தது.
ஆனால் குமார் தரமான ஆடைகளை தேடி வாங்கியதால் பல முறை அதை பயன்படுத்த முடிந்தது. மீதமான பணத்தை மகிழ்ச்சியாக சேமிக்க முடிந்தது.
நீங்கள் குமரா? பாபுவா?…. புது துணிகளுக்கு மட்டுமில்லை இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும்!
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.