சுற்றுலா பயணிகளின் தலை உரச தரையிறங்கிய விமானம்! ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சி


  • விமானம் சுற்றுலாவாசிகளின் தலைக்கு மிக நெருக்கமாக தரையிறங்கியது.
  • விமானம் மக்களுக்கு மிக நெருக்கமாக தரையிறங்குவதற்காகவே பிரபாமானது இந்த ஸ்கியாதோஸ் விமான நிலையம்.

கிரேக்க விடுமுறை தீவில் தரையிறங்குவதற்கு முன், சுற்றுலாப் பயணிகளின் தலையை கடந்து சென்ற விமானத்தி ஆச்சரியமான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஏர்பஸ் ஏ321நியோ என கூறப்படும் இந்த விமானம் ஸ்கியாதோஸ் விமான நிலையத்தில் கடற்கரைக்கு நெருக்கமாக அமைந்துள்ள ஓடுபாதையின் அருகே காத்திருந்த சுற்றுலா பயணிகளின் தலைக்கு சில அடிகள் மேலே கடந்து செல்வதை காணலாம்.

சுற்றுலா பயணிகளின் தலை உரச தரையிறங்கிய விமானம்! ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சி | Plane Extreme Low Landing Greek Skiathos Tourists

விமானம் மிக அருகில் வருவதைப் பார்த்து மக்கள் ஆச்சரியத்துடன் கூச்சலிடுவதை காணமுடிகிறது. பலரும் தங்கள் மொபைல் போன்கள் மற்றும் கமெராக்களில் இந்த விமான தரையிறக்கத்தை படம்பிடிக்கின்றனர்.

கிரேக்க நிலப்பரப்பின் கிழக்கே அமைந்துள்ள ஸ்கியாதோஸ், ஒரு பிரபலமான விடுமுறை இடமாகும்.

அதன் விமான நிலையம் ஏஜியன் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது, எனவே அணுகும் திசையைப் பொருட்படுத்தாமல் விமானங்கள் கடற்கரைக்கு மேலே பறந்து வந்து தான் தரையிறங்கவேண்டும்.

பல ஆண்டுகளாக இது போன்ற பல தருணங்களை காட்டும் வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. எனவே பார்வையாளர்களின் தலைக்கு அருகில் விமானம் வருவது இது முதல் முறையல்ல. ஆனால் இந்த காட்சி பார்ப்பவரை மெய் சிலிர்க்கவைக்கும் ஒன்று தான்.

வீடியோவைப் பதிவேற்றிய YouTube சேனல், 2013-ல் ஏர் இத்தாலி 737-8BK எனும் விமானத்தின் தாழ்வான தரையிறக்கத்தைவிட, இங்த சமீபத்திய தரையிறக்கம் “ஒருவேளை குறைவாக” இருக்கலாம் என்று கூறுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.