அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி மாயத் தேவர் நேற்று முன் தினம் காலமானார் அவருக்கு வயது 88. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய சமயம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் வந்தது. அதில் மாயத்தேவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்ஜிஆரின் சின்னம் என பாமர மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை சின்னத்துக்காக இன்று அதிமுகவில் கடுமையான மல்லுகட்டு நடைபெறுகிறது. அந்த சின்னத்தில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத் தேவர். அவரது மறைவையொட்டி அவரது உடல் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அதிமுக தொண்டர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில்
நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சார்பாக திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயக்குமார், பரமசிவம், ஜக்கையன், பார்த்திபன், தேன்மொழி உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மாயத் தேவர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என்று அவரது உறவினர்கள், அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஏற்கெனவே தெற்கு Vs மேற்கு என பிரிந்து நிற்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தென் மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த நிர்வாகியின் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.