நெல்லை: கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்; நடைப்பயிற்சி மேற்கொண்டவருக்கு நேர்ந்த சோகம்!

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் உள்ள நோயாளியை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றிவந்த 108 ஆம்புலன்ஸ், மீண்டும் முக்கூடல் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. அன்னராஜ் என்பவர் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

விபத்து

நெல்லை புறநகர் பகுதியான கொண்டாநகரம் கிராமத்தின் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருக்கிறது. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய வாகனத்தை நிறுத்த ஓட்டுநர் அன்னராஜ் முயற்சி செய்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சுப்பிரமணியன் என்பவர் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன், கொண்டாநகரம் கிராமத்தில் கோமதி நகரில் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்த அவருக்கு இரு குழந்தைகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடம்

கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய ஆம்புலன்ஸ், சாலையோரத்தில் உள்ள மரத்தின் மோது வேகமாகச் சென்று மோதி நின்றது. ஆம்புலன்ஸ் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநர் அன்னராஜ் மற்றும் உதவியாளரை அப்பகுதி மக்களும் போலீஸாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.