உலகம்முழுவதும் கொரோனா தொற்று பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில்நேபாளத்தில் கொரோனாவும் பன்றி காய்ச்சலும் ஒரே நேரத்தில் பரவி மக்களை பீதி அடையச்செய்துள்ளது.
நேபாளத்தில் சிலருக்கு ஒரே சமயத்தில்கொரோனா,பன்றிகாய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாககொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகளானடெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், எச்என்1 போன்றவைமக்களிடையே தொடர்ந்து பரவி வருகின்றன.
நேபாளத்தில்கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 1090 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். நேபாள மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் இன்புளூயன்சாகாய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளடு. ஒரேசமயத்தில் கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது மக்களைஅச்சமடைய செய்துள்ளது.
பன்றி காய்ச்சலால் சமீபத்தில்நேபாளத்தில் அரசியல் தலைவர்கள் கூட உயிரிழந்தார்கள். தற்போது இரண்டு நோய்களுக்கானஅறிகுறிகளும் ஏற்படுவது நாட்டில் அதிகமான பலி எண்ணிக்கையை உண்டாக்கக் கூடும் எனபொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தொற்றை தடுப்பதற்காக இந்தியாவிலிருந்துவரும் பயணிகளுக்கும் தடை விதிகப்படுள்ளது. இதனால் நேபாளத்தில் இந்தியாவிலிருந்துவரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற4சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த தடைபோடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில்தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் மேற்கு நேபால் பைதாடிமாவட்டத்தில் உள்ள ஜூலாகாட் எல்லைப்வழியாகச் சுற்றுலாப் பயணிகளாக வந்த நான்குஇந்தியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களைத் திரும்பிஅனுப்பியுள்ளனர்.
நேபாளத்தில்கொரோனா தொற்று சமீப காலமாக அதிகமா பரவுவதால் எல்லையில் வருபவர்களுக்குச் சோதனைசெய்யப்படுகிறது. அதில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தொற்றுகண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம்நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.