இந்தியாவின் முன்னணி ஆன்லைன் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனமான நைகா-வின் கிளை நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், முக்கியமான நிர்வாக மாற்றங்களைச் சந்தித்து உள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் பணக்காரர் பெண்கள் பட்டியலில் நைகா நிறுவனத்தின் நிறுவனரான பால்குனி நாயர் குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளார். நைகா நிறுவனம் ஆன்லைனில் மட்டும் அல்லாமல் ஆப்லைன் வர்த்தகச் சந்தையிலும் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் நைகா நிறுவனத்தின் உயர் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PVR பாப்கார்ன் விலை ஏன் அதிகமாக உள்ளது.. அஜய் பிஜ்லி பதில் என்ன தெரியுமா..?
நைகா நிறுவனம்
நைகா நிறுவனத்தின் private label beauty brands பிரிவின் சிஇஓ-வான ரீனா சாப்ரா ராஜினாமா செய்துள்ளதாக, நைகா பங்குச்சந்தையில் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி ரீனா சாப்ரா அதிகாரப்பூர்வமாக இப்பதவியில் இருந்து வெளியேறுகிறார்.
ரீனா சாப்ரா
ரீனா சாப்ரா 2016 ஆம் ஆண்டு நைகா நிறுவன பணியில் சேர்ந்தார், இதற்கு முன்னதாகக் காஸ்மெட்டிங் பிராண்டான Colorbar நிறுவனத்தில் COO ஆகப் பணியாற்றினார். இதற்கு முன்பு யுனிலீவர் நிறுவனத்தில் லேக்மி பியூட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஹெட் ஆகப் பணியாற்றியுள்ளார்.
3.06 கோடி ரூபாய் சம்பளம்
நைகா நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது சமர்ப்பித்த DRHP அறிக்கையின் படி, ரீனா சாப்ரா 2021 நிதியாண்டில் சுமார் 3.06 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். இதன் மூலம் நிறுவனத்தின் உயர்மட்ட ஊழியர்களில் ஒருவரானார்.
லாபம்
நைகா பிராண்டின் தாய் நிறுவனமான FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ் ஆகஸ்ட் 5 அன்று, ஜூன் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த லாபமாக 5.01 கோடி ரூபாயை பெற்றது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 42.24 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் லாபம் ரூ.3.52 கோடியாக இருந்தது.
Nykaa’s private label beauty brands CEO Reena Chhabra quits
Nykaa’s private label beauty brands CEO Reena Chhabra quits நைகா பிரைவேட் பிராண்ட் சிஇஓ ரீனா சாப்ரா திடீர் ராஜினாமா..?