- டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்
- பாபர் அசாம் டி20, ஒருநாள் அல்லது டெஸ்ட் ஆகிய எந்த வடிவிலான ஆட்டத்திலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் – ஜெயவர்த்தனே
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்த்தனே புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சமீபத்தில் இலங்கை டெஸ்ட் தொடரில் அவரது துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
இந்த நிலையில் பாபர் அசாம் குறித்து மஹேல ஜெயவர்த்தனே கூறுகையில்,
‘பாபர் அசாம் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
அது அவரது தரவரிசையில் காட்டப்பட்டுள்ளது. இயற்கையாகவே திறமையான வீரரான அவர், எல்லா நிலைகளிலும் விளையாடுகிறார்.
போட்டிக்கு ஏற்ப அவர் தனது ஆட்டத்தினை மாற்றியமைக்கிறார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ள ஒரே வீரர் பாபர் மட்டுமே’ என தெரிவித்துள்ளார்.
PC: Getty Images
PC: AFP
மேலும், அவர் இலங்கையில் நன்றாக துடுப்பாட்டம் செய்தார். பிரபத் ஜெயசூரியா தான் அவரது எதிரி என்று நான் நினைக்கிறேன். நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று முறை பாபரை அவர் ஆட்டமிழக்க செய்தார். அது பார்ப்பதற்கு மிகவும் நல்ல யுத்தம். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான முதல் சதத்தை அவர் அடித்தார்.
PC: Getty Images / Ishara S.Kodikara
கேப்டனாக இருந்தும் அவர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டார். அது பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இதனை செய்வது எளிதான காரியம் அல்ல.
அவர் எந்த நேரத்திலும் சத்தமிடமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
PC: AFP