பிரதமர் மோடி:
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 7-8 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு அந்நிய செலாவணியாக செல்வதில் இருந்து சேமிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது.
பப்ளிக் மைண்ட்வாய்ஸ்:
சந்தோஷம் ஜி… ஆனா நீங்க சொல்ற 7-8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுளாகி இருக்கே… அதுக்கான காரணத்த ‘மான் கி பாத்’தல நீங்க பேசும்போதாவது சொல்லுவீங்களா ஜி?
சசிகலா:
அதிமுகவில் நிலவும் குழப்பத்துக்கு திமுக தான் காரணம்!
மைண்ட்வாய்ஸ்::
என்னதான் இருந்தாலும் உங்களுக்கு எதிரா ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்து, தர்ம யுத்தம் நடத்துன ஓபிஎஸ்ஸையும், அமைதிப்படை அமாவாசை ரேஞ்சில் உங்களிடமே அரசியல் செஞ்ச இபிஎஸ்ஸையும் இன்னமும் நீங்க விட்டுதராத மாதிரி பேசி, திமுக மேல பழிப்போடுறீங்க பாருங்க… அங்கதான் நீங்க நிக்குறீங்க மேடம்!
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் -உடன் கூட்டணி? வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பில்ல – ஜெயகுமார்!
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால்:
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இது இலவசம் அல்ல; மக்களின் உரிமை! மக்கள் பணம் மக்களுக்கே செல்ல வேண்டும்; சுவிஸ் வங்கிக்கு அல்ல.
மைண்ட்வாய்ஸ்:
ஓகே… சந்தோஷம் ஜி… பொம்ள புள்ளைங்களுக்கு மாசாமாசம் 1000 ரூபா தாங்க… அப்படியே இந்த ஆம்புள பசங்களுக்கும் 1000 ரூபா கிடைச்சா நல்லாயிருக்கும்… பாவம் அவங்க மட்டும் என்ன பாவம் பண்ணாங்க?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:
கம்யூனிஸ்ட்காரர்களுக்கு வேலையில்லை; திமுக தரும் ஆக்சிஜன் சிலிண்டரை கையில் சுமந்து உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
மைண்ட்வாய்ஸ்:
அதிமுக தந்த ஆக்சிஜனில்தான் போன வருஷம் நடந்த அசெம்பிளி எலெக்ஷன்ல நீங்க நாலு சீட் ஜெயிச்சிங்கணும் அவங்க பதிலுக்கு கேட்டுட போறாங்க பாத்துக்குங்க ஜி!