ரக்சா பந்தன்.. புனிதமான சகோதர பந்தம்

சகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின் பாச பந்தம்தான் அண்ணன்-தங்கை உறவு. ஒரே தாயிடம் பிறந்து ஒன்றாக வளர்ந்து, அன்புக்கும் அரவணைப்புக்கும் பிணைப்புக்கும் ஆளாகும் உறவை, மேலும் பலப்படுத்தி இனிக்க வைக்கும் திருவிழா தான் ரக்சா பந்தன்.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில் ரக்சா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் அல்லது ராக்கி கட்டி மகிழ்கின்றனர்.

ராக்கி கயிறுகள் அழகழகான டிசைன்களில் சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டன. அவற்றை சகோதரர்களின் கைகளில் கட்டி அழகுபார்க்க பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

நாட்டின் எல்லையைக் காக்கும் வீரர்களுக்கும் பெண்கள் ராக்கி கட்டி சகோதரத்துவத்தை உறுதி செய்தனர்.

தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ ஆரத்தி எடுத்து திலகமிட்டு வாழ்த்தும் வளைக்கரங்களுக்கு, சகோதரர்கள் பரிசுகளைக் கொடுத்து மகிழ்விக்கின்றனர். ஆண்டுதோறும் ரக்சா பந்தன் பண்டிகை வந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வயது கூடிக்கொண்டே போனாலும் அன்புக்கு மட்டும் வயதாவதே இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.