வாரிசு – விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் ஷாம்
நடிகர் விஜய் தெலுங்கில் முதன்முதலாக வாரிசு என்கிற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் தமிழ் நட்சத்திரங்கள் நிறைய பேர் நடித்துள்ளனர், அதில் நடிகர் ஷாமும் ஒருவர். இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து சண்டைக்காட்சி வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் லீக் ஆகியுள்ளது.
அதில் துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்கள் சிலருடன் விஜய்யும் ஷாமும் இணைந்து மோதுவது போன்று அதில் இடம்பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் ஷாம் நடித்துள்ளார் என்கிற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. கடந்த 22 வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஷாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.