வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த உயரத்தில் இருந்து வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் மோட்டார் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ ஈடுபட்டுள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட உள்ள, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள, ‘பூஸ்டர்’ சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் குழு குறைந்த உயரத்தில் தப்பிக்கும் மோட்டார் எனப்படும் ‛லோ ஆல்டிட்யூட் எஸ்கேப் மோட்டாரின்’ சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் இந்த முயற்சி ஸ்ரீஹரிகோட்டாவில் நிகழ்த்தப்பட்டது. இத்திட்டத்தின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ராக்கெட்டில் பயணிக்கும் போது எதிர்பாராத விதமாக முதல்கட்டத்திலேயே ஏதாவது சிக்கல் ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்தால், வீரர்கள் குழு தப்பிக்க இந்த சோதனை முயற்சி வழிசெய்யும் எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement