2030ல் செஞ்சுரி போட்டுவிடுவோம் – வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால்

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று வேதாந்தா நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் லாபத்துடன் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அனில் அகர்வால் அவர்களுக்கு சொந்தமான வேதாந்தா குழுமம் வரும் 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் கொண்ட நிறுவனமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இணைய அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் முழு முயற்சியுடன் இயங்கி வருகிறது.

சுதந்திரத்திற்கு முன் உருவாகிய மாபெரும் வர்த்தக 7 சாம்ராஜியங்கள்..!

 100 பில்லியன் நிறுவனம்

100 பில்லியன் நிறுவனம்

வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் அனில் அகர்வால் நேற்று நடைபெற்ற 57வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது 2030ஆம் ஆண்டுக்குள் வேதாந்தா குழுமம் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக கொண்டிருப்பதை இலக்காக கொண்டுள்ளது என்று தெரிவித்தார்..

வளர்ச்சி

வளர்ச்சி

வேதாந்தா நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கார்பன் கழிவுகள்
 

கார்பன் கழிவுகள்

மேலும் கார்பன் நியூட்ராலிட்டி முயற்சியில் வேதாந்தா நிறுவனம் இயங்கி வருவதாகவும் இந்நிறுவனம் 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் கழிவுகள் இல்லாத பூஜ்ஜியம் என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அனில் அகர்வால் கூறியுள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனில் அகர்வால்

அனில் அகர்வால்

அனில் அகர்வால் கட்டுப்பாட்டிலுள்ள வேதாந்தா நிறுவனம் இயற்கைவளம் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாக உள்ளது என்பதும், இந்நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மின்சார வாகனங்கள், மின்சாரம் வாகனங்களின் கார் பேட்டரி உற்பத்திக்கு தேவையான உலோகமாக நிக்கல் தயாரிப்பில் ஒரே நிறுவனமாக வேதாந்தா நிறுவனம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செமி கண்டக்டர்

செமி கண்டக்டர்

மேலும் இந்நிறுவனம் செமிகண்டக்டர் ஃபேப்கள் மற்றும் டிஸ்ப்ளே ஃபேப்களை உற்பத்தி செய்யும் பகுதியிலும் நுழைந்துள்ளது. செமி கண்டக்டர்களின் உள்நாட்டு தேவையை இந்நிறுவனம் பூர்த்தி செய்யும் என்றும் இதனால் இந்நிறுவனம் 2026ஆம் ஆண்டில் $80 பில்லியனை கொண்ட நிறுவனமாகவும், 2030ஆம் ஆண்டுக்குள் $110 பில்லியனைத் தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vedanta aims to become $100 billion company by 2030, says Anil Agarwal

Vedanta aims to become $100 billion company by 2030, says Anil Agarwal | 2030ஆம் ஆண்டு செஞ்சுரு போட்டுவிடுவோம்… வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் நம்பிக்கை

Story first published: Thursday, August 11, 2022, 13:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.