சர்வதேச புரோக்கிங் நிறுவனம் சில இந்திய பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
இது ஜூன் காலாண்டில் நல்ல வலுவான செயல்பாட்டு மார்ஜினை காட்டிய நிலையில், ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
அது என்னென்ன பங்குகள்? ஏன் இதனை வாங்க பரிந்துரை செய்துள்ளது? இலக்கு எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
உலகில் எந்த நாட்டு மக்கள் அதிக டிஜிட்டல் கரன்சியை வைத்துள்ளனர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
என்னென்ன நிறுவனங்கள்?
வீகார்ட், பாலிகேப் உள்ளிட்ட நிறுவனங்களைத் தான் தரகு நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதே சில கட்டுமான பொருட்களை வாங்க நிறுவனங்களை வாங்கவும் பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக கஜாரியா செராமிக்ஸ் இயக்க வரம்பு அதிகரித்தாலும், எரிவாயு விலை உயர்ந்தாலும், ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.
வலுவான வளர்ச்சி
டிக்சான் டெக் நிறுவனம் வலுவான விற்பனை வளர்ச்சியினை முதல் காலாண்டில் பதிவு செய்துள்ளது. இதே செயல்பாட்டு மார்ஜின் விகிதமும் வலுவாக காணப்படுகிறது. இதே கஜாரியா செராமிக்ஸ் மற்றும், வீகார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் இபிஎஸ் விகிதத்தினை தரகு நிறுவனம் உயர்த்தியுள்ளது.
கஜாரியா செராமிக்ஸ்
கஜாரியா செராமிக்ஸ் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. டிக்சான் டெக்கின் வலுவான வளர்ச்சியானது பிஎல்ஐ-ல் வழி நடத்தப்பட்டுள்ளது. இதே பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியானது, காப்பர் விலையானது நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும கூட, நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது.
இலக்கு விலை
க்ரோம்ப்டன் க்ரீவ்ஸ் கன்சியூமர் எலக்ட்ரிகல்ஸின் இலக்கு விலை 490 ரூபாயில் இருந்து, 505 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
இதே டிக்சான் டெக்னாலஜீஸ் இலக்கு விலையானது 5300 ரூபாயில் இருந்து 5305 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
இதே ஃபினோலேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் இலக்கு விலை 195 ரூபாயாகும்.
கஜாரியா செராமிக்ஸ் இலக்கு விலை 1320 ரூபாயில் இருந்து 1325 ரூபாயாக் ஏற்றம் கண்டுள்ளது.
வேர்பூல் ஆஃப் & ஹெவல்ஸ் இலக்கு
இதே வேர்பூல் ஆஃப் இந்தியாவின் இலக்கு விலை 1775 ரூபாயாகவும், ஹெவல்ஸ் இந்தியாவின் இலக்கு விலை 1330 ரூபாயில் இருந்து, 1340 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வலுவான விற்பனை வளர்ச்சி இருந்தபோதிலும், ஹெவல்ஸ் மற்றும் வேர்ல்பூல் நிறுவனங்களின் செயல்பாட்டு மதிப்பீடுகளை விட குறைவாகவே இருந்தது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
5 stocks recommended to buy by an international brokerage firm
5 stocks recommended to buy by an international brokerage firm/5 பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?