ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ரூ.866.15-ஐ எட்டிய நிலையில் இதன் சந்தை மதிப்பு முதல் முறையாக 6.01 லட்சம் கோடி ரூபாயை தொட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இதுவரை ஐசிஐசிஐ வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதன் முந்தைய முடிவிலிருந்து 1.27 சதவீதம் அதிகரித்து 859.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … எப்படி சாத்தியம்?
எலைட் கிளப்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎப்சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இதற்கு முன்பு 6 லட்சம் கோடி ரூபாய் என்ற சாதனையை எட்டியுள்ளன. லைஃப் இன்சூரன்ஸ் கார்ப் ஆஃப் இந்தியாவும் அதன் வெளியீட்டை ஒரு பங்கிற்கு ரூ.949 என விலைகொடுத்த பிறகு 6 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியது.
ஐசிஐசிஐ வங்கி
மேம்பட்ட சொத்துத் தரம் மற்றும் குறைந்த ஒதுக்கீடுகளுடன் எதிர்பார்த்த வருவாயை விட ஐசிஐசிஐ வங்கி தொடர்ந்து சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு, பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் விருப்பமான முதலீட்டு பங்காக விளங்குகிறது.
ஜூன் 2022 காலாண்டு
சமீபத்தில் வெளியான ஐசிஐசிஐ வங்கியின் ஜூன் 2022 காலாண்டு முடிவில் அதன் நிகர லாபத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து 6,905 கோடி ரூபாயை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் வாராக் கடன் வழங்கல்கள் கடுமையாகக் குறைந்துள்ளன.
வட்டி வருமானம்
ஜூன் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிகர வட்டி வருமானம் 20.8 சதவீதம் அதிகரித்து ரூ.13,210 கோடியாக உள்ளது. மேலும் இக்காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் சொத்துக்களின் தரம் மேம்பட்டு உள்ளது. இவ்வங்கியின் வாராக் கடன் அளவு 0.19 சதவீதம் குறைந்து 3.41 சதவீதமாக உள்ளது.
கடன் புத்தகம்
ஜூன் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் கடன் புத்தகம் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 21% விரிவடைந்தது உள்ளது. இதில் முக்கியமான அடமானங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கடன்கள் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்தும் ரீடைல் கடன் 22% வருடாந்திர வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் SME கடன்கள் 31 சதவீதமும், வணிக வங்கி கடன் 45 சதவீதமும், கார்ப்பரேட் கடன் புத்தகம் 14 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ICICI Bank hits Rs 6 trillion m-cap first time
ICICI Bank hits Rs 6 trillion m-cap first time 6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!