கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பள்ளி சேதமடைந்து இருக்கிறது. இதுகுறித்து CBCID போலிஸ் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், தற்போது இன்று இந்த பள்ளி மாணவர்களுக்கு வேறொரு இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்களில் 174 பேரின் ஜாமீன் மனு இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், தற்போது 69 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பூர்ணிமா உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்ற நபர்களின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் இருக்கின்றது.