Policybazaar-ல் கணக்கு வைத்துள்ளீர்களா..? உஷார் மக்களே..!

உலகம் முழுவதும் டிஜிட்டல் தகவல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனமான பாலிசிபஜார் தளத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும், அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சைபர் செக்யூரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாலிசிபஜார் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

8 வங்கிகள் மீது RBI அபராதம்.. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களா..?

பாலிசிபஜார்

பாலிசிபஜார்

ஆன்லைன் இன்சூரன்ஸ் தரகர் பாலிசிபஜார்-ன் அமைப்பில் உள்ள பாதிப்புகள் (தொழில்நுட்ப கோளாறுகள்), ராணுவ பணியாளர்கள் உட்பட அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் பர்சனல் விவரங்களைத் திருடவும் கசியவும் வழிவகுத்தது என்று சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் புதன்கிழமை கூறியது.

ஆதார், பான், முகவரி தரவுகள்

ஆதார், பான், முகவரி தரவுகள்

இந்தப் பாதிப்புகள் மூலம் பாலிசிபஜார் தளத்தில் கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் போன் எண்கள் திருடப்பட்டு உள்ளதாகவும், ஜூலை 18 ஆம் தேதி பாலிசிபஜாருக்கு இந்தப் பிரச்சனை தெரிவிக்கப்பட்டதாகவும் சைபர்எக்ஸ்9 தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை
 

பங்குச் சந்தை

பாலிசிபஜார் பங்குச் சந்தைகளுக்கு ஜூலை 19 அன்று தனது அமைப்பில் தொழில்நுட்ப பாதிப்புகளைக் கண்டறிந்ததாகவும், குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் தரவு எதுவும் அம்பலப்படுத்தப்படவில்லை என்றும் ஜூலை 24 ஆம் தேதி தெரிவித்தது.

பிரச்சனைக்குத் தீர்வு

பிரச்சனைக்குத் தீர்வு

பாலிசிபஜார் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில் ஜூலை 24 அன்று பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்ததைக் குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் வெளி ஆலோசகர் உறுதிப்படுத்தியபடி பிரச்சனைகளை அடையாளம் காணப்பட்டுப் பாதிப்புகள் முறையாகச் சரி செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

தடயவியல் தணிக்கை

தடயவியல் தணிக்கை

மேலும் தகவல் திருட்டு அல்லது கசிவு குறித்து உறுதி செய்ய வெளி ஆலோசகர்களைக் கொண்டு இது குறித்து முழுமையான தடயவியல் தணிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று பாலிசிபஜார் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

PB fintech பங்கு விலை

PB fintech பங்கு விலை

பாலிசிபஜார் மும்பை பங்குச்சந்தையில் PB fintech என்ற பெயரில் பட்டியலிடப்பட்டு உள்ளது. PB fintech பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 4 சதவீதம் உயர்ந்து 583.35 ரூபாயாக உள்ளது, 2022ல் இந்நிறுவனப் பங்குகள் 38.54 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வின் அளவு 1,470.00 ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Policybazaar data breach Vulnerabilities exposed

Policybazaar data breach Vulnerabilities exposed | Policybazaar-ல் கணக்கு வைத்துள்ளீர்களா..? உஷார் மக்களே..!

Story first published: Thursday, August 11, 2022, 14:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.