அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் வீட்டில், ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை:
திமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 15 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சோதனை குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாமக்கல் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் K.P.P.பாஸ்கர், அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 11.08.2022 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண். 01/AC/2022 u/s 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act, 1988 மற்றும் 109 IPC & 12, 13(2) r/w 13(1) (b) of the Prevention of Corruption Act, 1988 as amended in 2018-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி வழக்கு தொடர்பாக K.P.P.பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவரது அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூரில் ஒரு இடம், மதுரையில் ஒரு இடம் ஆக மொத்தம் 30 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பணம் ரூ.26,52,660/-, ரூ.1,20,000/ மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள், 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ.14,96,900/- மற்றும் வழக்கு தொடர்புடைய 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.