டெல்லி: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். யானைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பண்பாட்டோடும் பண்டிகைகளோடும் கலந்து விட்டவை. பலமிக்க யானை அன்பிற்கு கட்டுபட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையின் அன்பை பெற, ஆசியை பெற ஆசைப்படுவதுண்டு. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் உலக யானைகள் தினத்தை கடைப்பிடிக்கின்றன. இந்நிலையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது. ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். யானைகளை பாதுகாப்போம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.