இந்தியாவின் அடுத்த 5G புரட்சியை வழிநடத்தப்போகிறது ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையில் அடுத்த புரட்சியான 5G அலைக்கற்றையை அறிமுகப்படுத்தும் பணியில் இந்தியா அதிவேகமாக செயல்பட்டு‌ வருகிறது.அதற்கான ஏலம் சமீபத்தில் மத்திய அரசால் நடத்தப்பட்டது. அந்த ஏலத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 900 MHz, 1800 MHz, 2100MHz, 3300 MHz மற்றும் 26 GHz அலைவரிசைகளில் 19867.8 MHz ஸ்பெக்ட்ரத்தை வாங்க 43,084 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஏற்கனவே 5G சோதனையில் வெற்றிகரமாக முண்ணனியில் இருக்கும் ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒரு தொலைதொடர்பு புரட்சியையே நிகழ்த்த தயாராகிவிட்டது.

ஏர்டெல் பிளேபுக்கில் என்னதான் உள்ளது?
இந்தியாவின் விரிவடைந்த ப்ராட்பேண்ட் சேவையை வழங்குவதில் ஒரு முண்ணனி நிறுவனமாக பாரதி ஏர்டெல் திகழ்ந்து வருகிறது. எனவே இந்தியாவின் 5G புரட்சியை வழிநடத்தி செல்ல ஏர்டெல் ஒரு சிறந்த நிறுவனம். மிக நீண்ட காலமாகவே ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையின் தன்னுடைய லாவகமான யுத்திகளால் சிறந்த சேவையை அளித்து வருகிறது. இதன் சாமர்த்தியத்தால் தொலைத்தொடர்பு துறையின் low and mid-band spectrum (Sub GHz/1800/2100/2300 bands) ஏர்டெலின் வசம் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு மலிவான மற்றும் சிறந்த 5G சேவையை வழங்க ஏர்டெலால் மட்டுமே முடியும்.

ஏர்டெல் எம்டி என்ன சொல்கிறார்?
ஏர்டெலின் இந்த 5G புரட்சி குறித்து பேசிய பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ கோபால் விட்டல் கூறும்போது, 5G ஏலத்தில் கலந்துக்கொண்டு அதை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது எங்களின் நீண்ட கால யுக்தியின் ஒரு பகுதியாக எங்களது போட்டியாளர்களை விட குறைந்த மதிப்பில் ஏலத்தை பெற்று பயனாளர்களுக்கு நிறைந்த சேவையை‌ அவர்களின் தேவைக்கேற்றவாறு வழங்குவதற்கான ஒரு நீண்ட திட்டமிடல்.

அதேபோல் இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா எதிர்கால திட்டமிடலோடு ஒன்றிணைந்து அதை பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனம் பணிபுரியும். இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு சிறந்த தொலைதொடர்பு சேவையை எல்லா வகையிலும் வழங்கி பல்துறைகளில் இந்தியாவை முன்னுதாரணமான தேசமாக மாற்றுவோம் எனவும்‌ அவர் கூறியுள்ளார்.

ஏர்டெல்தான் முன்னோடி..
இந்தியாவில் 5G சேவையை நிறுவுவதில் ஏர்டெல்தான் பல ஆண்டுகளாக பல சோதனைகள் மற்றும் முயற்சிகளை செய்து வருகிறது. 2018ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் ஏர்டெல்தான் 5G ட்ரெயலை நடத்தியது. கொல்கத்தாவில் 700 MHz band அலைவரிசையில் 5G ட்ரெயலை ஏர்டெல்தான் முதன்முதலில் நடத்தியது. கடந்த ஆண்டு கூட டெல்லியின் கிராமப்புறப் பகுதிகளில் 5Gட்ரெயலை முதன்முதலில் ஏர்டெல்தான் செய்தது. 2021 ஆம் ஆண்டு ஏர்டெல்தான் முதன் முதலில் இந்தியாவின் live cloud gamingகண்காட்சியை நடத்தியது.

மேலும் இதே ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவின் 175 ரன் நாட்அவுட் சாதனையை பெருமை படுத்தும் விதமாக அவரின் 5G-powered live hologram-ஐ வெளியிட்டது.அதேபோல இந்தியாவின் முதல் தனியார் 5G நெட்வொர்க்கை BOSCH வசதியில் அறிமுகப்படுத்தியது. அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து முதல் 5G-இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஏர்டெல்.

இந்தியாவில் 5G புரட்சி ஏற்படுத்த போகும் தாக்கங்கள்
இணைய உலகத்தில் 5G தொழில்நுட்பமும் ஏர்டெலும் இணைந்து புரட்சியை ஏற்படுத்த போகின்றன. தடைபடாத கேமிங், இணைய வசதி , நொடிப் பொழுதில் நினைத்த வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. பயணத்தில் இருந்தாலும் 4k வீடியோக்களை இணையதள தடை இல்லாமல் பார்க்கலாம். வணிகத்துறை முதல் மருத்தவத்துறை வரை அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த 5G சேவை சிறந்த சேவையை வழங்க உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வேகமான டிஜிட்டல் உலகை அறிமுகப்படுத்த வந்துக் கொண்டிருக்கிறது ஏர்டெலின் 5G சேவை.

இதில் வரம் என்னவென்றால் ஏற்கனவே இந்தியாவில் 5G வசதி உள்ள மொபைல் போன்கள் ஏற்கனவே வந்துவிட்டதால் வாடிக்கையாளர்கள் 5G சேவையை பெறுவதில் சிக்கல் இருக்காது‌ . மேலும் நோக்கியா எரிக்ஷன் சாம்சங் போன்ற தன்னுடைய பார்ட்னர்களுடன் சேர்ந்து இந்தியாவின் மூலை முடுக்கிலெல்லாம் 5Gசேவையை வழங்க திட்டமிட்டுள்ளது பாரதி ஏர்டெல் நிறுவனம்.

Disclaimer: இந்தக் ஆர்டிகள் ஏர்டெல் சார்பாக டைம்ஸ் இன்டர்நெட்டின் ஸ்பாட்லைட் குழுவால் தயாரிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.