கரூர்: பள்ளிச் சிறுமிகளை மதிய உணவுக்கு அழைத்துச் சென்று ஒயின் குடிக்கவைத்த இளைஞர்! கைதுசெய்த போலீஸ்

கரூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்றது. அப்போது அந்த மூன்று மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதியுள்ளனர். அந்த தேர்வை எழுதியபிறகு அவர்கள் மூன்று பேரும் வெளியில் வந்துள்ளனர். அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர், அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைக் குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுவிட, மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்தும், பாதி மயக்க நிலையிலும் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவசர எண்ணான 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். அங்குவந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்த மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினேஷ் கரூர்

அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி போலீஸார் அனுப்பிவைத்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பசுபதிபாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்த தினேஷ் என்ற தீனா (வயது: 22) என்பவர், அந்த மூன்று மாணவிகளையும் மதிய உணவுக்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அந்த மூன்று மாணவிகளையும் ரெட் ஒயின் குடிக்க வற்புறுத்தி மிரட்டியதாகவும், அதன்பிறகே அந்த மாணவிகள் ஒயின் குடித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பேரில் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார், தினேஷ்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.