அகமதாபாத்: குஜராத் மாநிலம் ஆனந்த் நகர் மாவட்டத்தில் நேற்றிரவு கார், பைக், ஆட்டோ ரிக்ஷா ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆனந்த் நகர் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா கூறுகையில், ‘ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும், பைக்கில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் ஓட்டுனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.