சென்னை: தமிழ்நாட்டில் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மத்தியஅரசு 18 வயதானவர்களுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என அனுமதி வழங்கியது. அத்துடன் இந்த தடுப்பூசி போடும் திட்டம் 13ந்தேதி (இன்று) தொடங்கும் என அறிவித்தது. பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணை தடுப்பூசியாக போட்டுக் கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது அதன்படி, தமிநாட்டில் கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் செனனையில் தொடங்கியது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று தொடக்கி வைத்தார். இதன்மூலம், கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.