சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் 3-வது இடம்: இந்தியா டுடே கணிப்பு

நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் மு.க. ஸ்டாலின் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரதமர் வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே, நாட்டின் சிறந்த முதலமைச்சர் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பில் நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதலிடமும், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உள்ளார். இவர்கள் முறையே 78, 63 மற்றும் 61 சதவீத வாக்குகள் பெற்றுள்ளனர்.
அதேபோல் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 54 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.
மேலும் 40 சதவீதம் பேர் காங்கிரஸின் எதிர்க்கட்சி செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகவும், 34 பேர் திருப்தி இல்லையென்றும் பதிலளித்துள்ளனர்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என 23 சதவீதம் பேரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருத்தமானவர் என 16 சதவீதம் பேரும், சச்சின் பைலட்டிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என 14 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.

மேலும் தற்போது தேர்தல் நடத்தினாலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி 286 இடங்களில் வெல்லும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 111 இடங்களும் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.