அமெரிக்கா பத்திர சந்தையானது வட்டி அதிகரிப்பின் மத்தியில் மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது.
எனினும் டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்து காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய தங்கம் விலையானது, தொடர்ந்து சரிவிலேயே கணப்படுகிறது. இது இன்னும் சரியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
வட்டி அதிகரிக்குமா?
அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது சற்றே மிதமாக தொடங்கியுள்ள நிலையில், இது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பல தரப்பு நிபுணர்களும் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், அது பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கலாம். இதனால் இனியும் வட்டி அதிகரிப்பு இருக்காது என்றும் கூறுகின்றனர். ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பணவீக்கம்
தொடர்ந்து பணவீக்கமானது அதிகரித்து வரும் நிலையில் இனியும் அதிகரிக்குமா? இனி என்னவாகுமோ? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதற்கிடையில் இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
முக்கிய லெவல்
தங்கம் விலையானது இன்று சரிவினைக் கண்டு இருந்தாலும், தொடர்ந்து அவுன்ஸுக்கு 1800 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகிறது. இது தங்கம் விலை ஏற்றம் காணலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சீன தைவான் பிரச்சனை, உக்ரைன் ரஷ்யா பிரச்சனை என பலவும் கவனிகக வேண்டியவையாக உள்ளது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1806.75 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை சற்று அதிகரித்து, 20.358 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை சற்று குறைந்து காணப்படும் நிலையில், வெள்ளி விலை சற்று தடுமாற்றத்தில் தான் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
தங்கம் விலையானது தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து, 52,406 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலை கிலோவுக்கு 212 ரூபாய் அதிகரித்துது, 58,502 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 4890 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 39,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 5334 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,672 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 53,340 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 64.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 644 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 64,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,900
மும்பை – ரூ.47,750
டெல்லி – ரூ.47,900
பெங்களூர் – ரூ.47,800
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,900
gold price on 12th August 2022: Why this volatility in gold prices? Will it be less today?
gold price on 11th August 2022: Gold prices are looking strong even as inflation has started to ease/தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!