சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆவின் பால் விலையை விட 50 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழகத்திரல் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தியுள்ளன. இதன்படி ஒரு தனியார் பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், மற்றொரு தனியார் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும் உயர்த்தி உள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பால் சார்ந்த பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் பால்கள் நீலம், பச்சை, ஆரஞ்சு என்று மூன்று வகையாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி நீலம் பால் லிட்டருக்கு ரூ.40, பச்சை பால் லிட்டருக்கு ரூ.44, ஆரஞ்சு பால் லிட்டருக்கு ரூ.48 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது..
ஆனால் தனியார் நிறுவனங்களின் பால்கள் ரூ.54 முதல் 72 வரை விற்பனையாகிறது. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.