தமிழ்நாட்டில் மது கலாச்சாரம்… கருணாநிதி மட்டும்தான் காரணமா? எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இதில் பங்கு இல்லையா?

‘தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணை போனால், அவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன்’ சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பிக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கூறிய வார்த்தைகள்தான் இவை. இந்த வார்த்தைகளே தற்போது முதல்வருக்கு எதிராக திரும்பியுள்ளது.

மதுபானம் போதைப் பொருள் இல்லையா?: அ
ரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகள்தான் சமூகத்தில் நடக்கும் அத்துணை அட்டூழியங்களுக்கு ஆணிவேர். அந்த ஆணிவேரை அறுக்காமல் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுவது சரியா? அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் போதை வகையில் சேராதா? என்ற பொருள்படும்படி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளி்ட்டோர் ஸ்டாலின் மீது விமர்சன கணைகளை வீசியுள்ளனர்.

இதில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் தன் பங்குக்கு முதல்வர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார். ‘போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர்தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்’ என்று ட்விட்டரில் தமது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அவரது இந்த கருத்து, ஏதோ கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இருந்ததாகவோ, அதன் பிறகு மீண்டும் தற்போது ஸ்டாலின் காலத்தில்தான் இங்கு மதுபானக் கடைகள் இருப்பதாகவும் பொருள் தருவதாக உள்ளது. அத்துடன கருணாநிதிக்கு பிறகு எம்ஜிஆர் ஆட்சி காலத்திலோ. தற்போது ஸ்டாலினுக்கும் முன் ஜெயலலிதா ஆட்சி காலத்தோ தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இருந்ததில்லையா என கே்ள்வியையும் ஹெச்.ராஜாவின் இந்த பதிவு எழுப்பி உள்ளது.

மலிவுவிலை மதுக்கடை:
உண்மையில், தமிழ்நா்ட்டில் கள்ளச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 70 களில் மலிவுவிலை மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் என்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அவை மூடப்பட்ட. அதன் எதிர்விளைவாக கள்ளச்சாராயம் பெருகியதை அடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எம்ஜிஆரே மதுபானக் கடைகளை திறக்க வேறுவழியின்ரி அனுமதி அளித்தார். இப்படி தமிழகத்தில் மது கலாச்சாரம் காலுன்ற கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இருபெரும் தலைவர்களுமேதான் காரணம். ஆனால் அவர்களின் ஆட்சி காலங்களில் எல்லாம் மதுக்கடைகளை தனியார்தான் நடத்தி வந்தனர்.

அரசு மதுபானக் கடைகள் திறப்பு: ஆ
னால் ஒரு மாநில அரசே நேரடியாக மதுபானக் கடைகளை நடத்தும் கொடுமை 2001 06 இல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் நடந்தது. அன்றில் இருந்து இன்றுவரை மாநிலம் முழுவதும் அரசே நடத்திவரும் 6000 ப்ளஸ் டாஸ்மாக் மதுபானக் கடைகளால் பாழாய் போன இந்த மது கலாச்சாரம் தமிழகத்தில் வேரூன்றிவிட்டது, ஒரு காலத்தில் மது அருந்துவது ஒரு சமூக குற்றமாக கருதப்பட்டு வந்த நிலைமாறி. பள்ளி மாணவர்கள் மத்தியிலும் மது அருந்தும் பழக்கம் சர்வசாதாரணமாகிவிட்டது.

இந்த அளவுக்கு தமிழ் சமூகம் சீரழிந்து கிடப்பதற்கு அரசு மதுபானக் கடைகளை திறந்த ஜெயலலிதாதான் முதல் காரணம். அவருக்கு அடுத்தபடியாக கருணாநிதி. எடப்பாடி பழனிசாமி இதற்கு காரணகர்த்தாக்கள்,. இவர்களின் வரிசையில் கடைசியில்தான் ஸ்டாலின் வருகிறார். ஆனால் ஹெச்.ராஜாவோ கருணாநிதியில் ஆரம்பித்து ஸ்ரைட்டாக ஸ்டாலினுக்கு வருகிறார். இடையில் ஆட்சிபுரிந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ். இபிஎஸ் ஆகியோரை அவர் வசதியாக மறுந்துவிட்டது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்ற பாசமோ? என்ற கேள்வியையும் ஹெச்.ராஜாவின் இந்த பதிவு எழுப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.