தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. பல வருடங்களாக நடித்து வரும் தமன்னா, தனது ஆரம்ப காலங்களில் உச்சத்தில் இருந்தார். ஆனால் சமீபகாலமாக மிகக் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமன்னா, தனது திரையுலக வாழ்வில் ஏற்படும் வெற்றித் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிக் கூறினார்.
இது குறித்துப் பேசிய அவர், “எனது திரையுலக வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்விகளை நான் எதிர்கொள்வதற்கு என் குடும்பத்தினர் பெரும் உதவியாக இருக்கிறார்கள். நான் கஷ்டப்படும் சமயங்களில் அவர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி திரையுலக வாழ்வில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை நம் சொந்த வாழ்வின் வெற்றி தோல்வியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நான் ஒரு நடிகை என்னும் பட்சத்தில் நான் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். என்ன நடந்தாலும் நான் என்னை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டதில்லை” என்று கூறினார்.