டெல்லி: நெல்லை மாவட்டம் அகஸ்தியமலை பகுதியை யானைகள் காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஏற்கனவே 4 யானைகள் காப்பக பகுதிகள் உள்ள நிலையில் மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அகஸ்திய மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.