- சர்ரே படகு கிளப்பில் வியாழன்கிழமை கரை ஒதுங்கிய தேடப்பட்ட ஆண் சடலம்
- மக்கள் திறந்த நீரில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் எச்சரிக்கை
பிரித்தானியாவின் சர்ரேயில்(surrey) உள்ள படகு கிளப்பில் வியாழன்கிழமை ஆண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் டெஸ்பரோ செயிலிங் கிளப் அருகே ஆண் ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்றதாகவும், அவர் மீண்டும் வெளியே தென்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் வியாழன்கிழமை மாலை சர்ரேயில் உள்ள படகு கிளப்பில் அருகே உள்ள நீர்வழிப்பாதையில் ஆண் ஒருவரின் சடலம் தென்பட்டதும் அவசர சேவைகள் அழைக்கப்பட்டது.
⚠️At approx. 8pm last night we sent 2 water rescue vehicles to an incident near Desborough Sailing Club, #Shepperton. Residents were searching for a person who was last seen entering the water. Sadly, after midnight a Search Group International team recovered a body.
— Surrey Fire & Rescue Service (@SurreyFRS) August 12, 2022
இதனைத் தொடர்ந்து தண்ணீருக்கு அடியில் காணாமல் போன நபரை தேடும் பணியில் தற்போது தேம்ஸ் நதியில் இருந்து சடலம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரித்து வருவதாகவும் சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை தொடர்ந்து வெடித்து வருவதால், மக்கள் திறந்த நீரில் செல்லும்போது பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஸ்பெயின், பிரான்ஸ் புதிய எரிவாயு குழாய்…துணைப் பிரதமர் தெரேசா ரிபெரா முக்கிய அறிவிப்பு
அத்துடன் தெரியாத நீரில் குதிக்க வேண்டாம் என்று தீயணைப்பு சேவை மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.