கூடலூர் அருகே மீண்டும் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது அய்யன்கொல்லி பகுதி. கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் அனுப்ப முயன்றனர்.
அப்போது, யானைகள் சாலை வழியாக ஓடியது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று மீண்டும் அதே பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. பள்ளியில் இரவுநேர காவல் பணியில் இருந்தவர்கள், கேட்டை திறந்து வைத்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறையினர் யானையை லாவகமாக மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/08/160280.webp.webp.webp)