*பிரித்தானியாவில் ஏராளமான பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.
*குறிப்பாக, நடிகர்கள், நடனக்கலைஞர்கள், நீச்சல் பயிற்சி அளிப்போருக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
பிரித்தானியாவில் சென்ற மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டுமே 1.85 மில்லியன் வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், வாரந்தோறும் 200,000 பணியாட்கள் தேவை என விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, இதுவரை இல்லாத வகையில், நடிகர்கள், நடனக்களைஞர்கள் போன்ற பொழுதுபோக்குத் துறை தொடர்பான பணி மற்றும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிப்போர் ஆகியோருக்கு அதிக அளவில் தேவை உள்ளதாக வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வறண்ட வானிலை மற்றும் வறட்சி குறித்த அச்சம் ஆகியவை காரணமாக கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களில் பணியாட்கள் தேவை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், சிறை அதிகாரிகள், மருத்துவ மற்றும் சமூகத்துறை ஊழியர்கள் பணிகளுக்கான பணியிடங்களில் தற்போது வேலைவாய்ப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image – File pic